கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயின்றவர்களுக்கு மெட்ராஸ் ஐஐடி-யில் 3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1BMipd74AziwjCH3AIuZm2eYF5qMOusm1/view என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ndian Institute of Technology Madras) சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். 1959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது.

இந்த உயர்கல்வி நிறுவனம் சென்னை 2.5 சதுர கிலோமீட்டர் (620 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் கிண்டி தேசியபூங்கா இருந்த வளாகத்தில் அமைந்திருந்தது. முற்றிலும் கல்விக்கூட வளாகத்தில் தங்கிப் படிக்கும் கல்விக்கூடமாகிய இந்த உயர்கல்விக் கழகத்தில் ஏறத்தாழ 360 ஆசிரியர்கள்,4000 மாணவர்கள் மற்றும் 1,250 நிர்வாகத் துணை அலுவலர்கள் உள்ளனர். 1961 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற ஆணை பெற்ற நாளிலிருந்து கல்வி நிறுவனம் சென்னை நாட்டின் கற்பித்தல்,ஆய்வு மற்றும் தொழில் அறிவுரைத் துறைகளில் முதன்மை மையமாக வளர்ந்துள்ளது. இந்தக் கல்வி வளாகத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருக்கும் கிண்டி தேசிய பூங்காவால் பொலிவுபெறும் இவ்வளாகத்தைப் புள்ளி மான்கள், கலைமான்கள், புல்வாய் மான்கள், குரங்குகள், சில வகை ஆமைகள் மற்றும் சில வனவிலங்குகள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன.
வ்வளாகத்தில் அமைந்திருக்கும் ஓர் எழில்மிகு ஏரி, அதிக மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டு 1988 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தூர்வாரப்பட்டது.
1956 ஆம் ஆண்டு ஜெர்மனி அரசு இந்தியாவிற்குப் பொறியியலில் உயர்கல்வி வழங்கக் கல்விக்கூடம் ஒன்றை நிறுவத் தொழில்நுட்ப உதவி வழங்கியது. இதற்கான முதல் இந்திய-ஜெர்மனி உடன்பாடு 1959 ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனியின் பான் நகரில் ஒப்பந்தம் செய்யப்பட்டு சென்னையில் தொடங்கப்பட்டது. அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அச்சமயத்தில் இது ஜெர்மனி அரசால் அவர்கள் நாட்டிற்கு வெளியே மேற்கொண்ட மிகப்பெரிய கல்வித்திட்டமாகும். இது பின்வரும் ஆண்டுகளில் ஜெர்மானிய பல்கலைக்கழகங்களுடனும் கல்விநிறுவனங்களுடனும் பல ஒருங்கிணைந்த ஆய்வு திட்டங்களை நடத்த வித்திட்டது.
ஜெர்மன் அரசின் அதிகாரப்பூர்வ உதவி முடிந்தாலும் அந்நாட்டின் பிற கல்வித் திட்டங்கள், (DAAD - Deutscher Akademischer Austauschdienst - ஜெர்மன் கல்வி பரிமாற்ற சேவை) ,( அலெக்சாண்டர் வான் அம்போல்ட் பவுண்டேசன்-அம்போல்ட் கல்விக்கொடை) மூலம் பல ஆய்வுத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பெருமைவாய்ந்த மெட்ராஸ் ஐஐடி-யில் தான் தற்போது 3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்களுக்கான கல்வித் தகுதி:
3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்களுக்கு, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அனிமேஷன், கெமிக்கல் பிரிவில் பிஎச்டி, என்விரான்மென்டல் இன்ஜினியரிங் (Bachelor's degree in Computer Graphics, Animation / Ph.D. in Chemical / Environmental Engineering) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் தங்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/-மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
3டி ஜெனரலிஸ்ட் (3D Generalist) பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு, ஸ்கில் டெஸ்ட், நேர்முகத் தேர்வு (written / skill test / interview) மூலம் ஒப்பந்த (Contract) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.01.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இணையதள முகவரி:
இந்தப் பணியிடம்
கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1BMipd74AziwjCH3AIuZm2eYF5qMOusm1/view என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












