அப்ளை பண்ணியாச்சா...சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணி!

Posted By: Kani

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் 13.04.2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்: 16  

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்.டி.யில் முதல் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: உதவி பேராசிரியர்- 3 ஆண்டுகள், இணைப் பேராசிரியர்- 6 ஆண்டுகள், பேராசிரியர்- 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13-04-2018.

விண்ணப்பிக்கும் முறை:  இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்களையும் புகைப்படத்தையும் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தை மட்டும் பிரதியெடுத்து, கையொப்பமிட்டு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Dean (Administration)

IIT Madras

Chennai 600 036.

அறிவிப்பு குறித்து முழுமையான விவரங்களுக்கு: இந்த இணைப்பை பார்க்கவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள பிடிஎப் வடிவிலான அறிவிப்பு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. விண்ணப்பம்:

விண்ணப்பிப்பது எப்படி என்பதை முழுமையாக படித்த பின் ஆன்லைன் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

பின்னர், விண்ணப்பத்தை மட்டும் பிரதியெடுத்து, கையொப்பமிட்டு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  

English summary
IIT Madras Invites Application For Professor, Associate Professor and Assistant Professor

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia