சென்னையில் உள்ள மிகச்சிறப்பு வாய்ந்த உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடப்பிரிவு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தப் டிப்பில் சேர்வதற்கு மே 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தற்போது அறிவித்துள்ளது. இதற்காக https://study.iitm.ac.in/es/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Indian Institute of Technology Madras) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும் இது. மத்திய அரசினால் தேசிய இன்றியமையாத கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாக அமைந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
1959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது. ஏராளமான கல்வி நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிய பெருமையை உடையது சென்னை ஐஐடி.

சென்னை ஐஐடியில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. இப்பாடப்பிரிவில் சேர ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி அவசியமில்லை என்பதால் 12-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இதில் சேர்ந்து படித்து பயன் பெற்று வருகின்றனர்.
தற்போது, சென்னை ஐஐடியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இப்பாடத் திட்டத்தில் பயின்று வருகின்றனர். 2 ஆண்டுகளாக இந்தப் படிப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக இப்பாடத்திட்டம் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதால் சிறப்புப் பெற்றுள்ளது. அதேசமயம் இந்தப் படிப்புக்கான ஆய்வக சோதனைகள் சென்னை ஐஐடி வளாகத்தில் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்பிப்பதையும், உரிய ஆய்வக சோதனைகளை பரிசோதிப்பதையும், நேரடியாக தேர்வு எழுதுவதையும் இப்பாடத்திட்டம் ஒருங்கிணைக்கிறது. இதனால் ஏராளமான மாணவ, மாணவிகள் இதில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னை ஐஐடியில் இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் (பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) படிப்பில் 3-வது பேட்ஜில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தற்போது அழைப்பு விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த பாடத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வரும் மே 26-ம் தேதிக்குள் https://study.iitm.ac.in/es/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இத்தகவலை சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












