திருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு Level 14A-யின் படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருச்சி ஐஐஎம் (Indian Institute of Management IIM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஐஐஎம் திருச்சியில் தற்போது Assistant Professor, Associate Professor, Professor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
- அரசு, யுஜிசி அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Ph.D பட்டம் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Pay Level 12 முதல் Pay Level 14A வரை ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட IIM Trichy பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.iimtrichy.ac.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 24.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Seminar-presentation மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iimtrichy.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.