திருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி, எஸ்டேட் ஆபீசர், மேலாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.1 லட்சம் வரையில ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : திருச்சி ஐஐஎம் (Indian Institute of Management IIM)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
நூலக உதவியாளர்:
திருச்சி ஐஐஎம்-யில் காலியாக உள்ள நூலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து, நூலக அறிவியல் படிப்பில் முதுநிலை படிப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
சீனியர் பைனான்ஸ் மற்றும் கணக்கு அதிகாரி:
சீனியர் பைனான்ஸ் மற்றும் கணக்கு அதிகாரி ஆகிய பணிகள் இரண்டு வருட ஒப்பந்த கால பணிகள் ஆகும். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் வழங்கப்படும். காமெர்ஸ் துறையில் பட்டப்படிப்பு முடித்து SAS / SOGE துறையில் பணியாற்றியவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதோடு, லெவல் 11 ஊதிய விகிதத்தில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அரசுத்துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர்:
மேனேஜர் EEC, மேனேஜர் (சென்னை வளாகம்) என இரண்டு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலாண்மை துறையில் முதுநிலை படிப்பு முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும். குறைந்தது ரூ.30,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iimtrichy.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து. ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iimtrichy.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.