கோட்டயம் ஐஐஐடி-யில் எம்.டெக் படிக்க ஆசையா...

கேரள மாநிலம் கோட்டயத்தில் இயங்கிவரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னலாஜியில் (ஐஐஐடி)முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு ஒருங்கிணைந்த எம்.டெக் படிப்புக்கு அதிக அளவில் கிராக்கி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இன்றே இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற https://imtech.iiitkottayam.ac.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறியலாம்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, நாட்டில் உள்ள மிகச்சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது சுருக்கமாக ஐஐஐடி கோட்டயம் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் வளவூரில், பாளையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் நிறுவனம் ஆகும்.

இது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இது பொது-தனியார் கூட்டு முறையில் இந்திய அரசு, கேரள அரசு மற்றும் தொழில்துறை பங்குதாரரால் 50:35 முதலீட்டு விகிதத்தில் நிதியளிக்கப்படுகிறது.
IIIT கோட்டயம் 2015-ல் நிறுவப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், IIIT PPP மசோதா 2017 மூலம் IIITK தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

IIITK ஆனது 2015 ஆம் ஆண்டு ஜூ மாதம் கேரளாவின் அமல் ஜோதி பொறியியல் கல்லூரியில் NIT கோழிக்கோடின் வழிகாட்டுதலின் கீழ் அதன் தற்காலிக வளாகமாக செயல்படத் தொடங்கியது. டிசம்பர் 2016-ல், IIITK இன் வழிகாட்டுதல் IISER திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது மற்றும் போக்குவரத்து வளாகம் திருவனந்தபுரத்தில் உள்ள Gulati இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸ் அண்ட் டாக்சேஷன் (GIFT) வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

கோட்டயம் ஐஐஐடி-யில் எம்.டெக் படிக்க ஆசையா...

பின்னர் ஐஐஐடிகே அதன் நிரந்தர வளாகத்தில் செயல்படத் தொடங்கியது, இது அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் 20 பிப்ரவரி 2019 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இன்ஸ்டிட்யூட்டின் முதல் வழிகாட்டி இயக்குனர் சிவாஜி சக்ரவர்த்தி, என்ஐடி காலிகட்டின் இயக்குனர்.[4] IISER-TVM க்கு வழிகாட்டுதல் மாற்றப்பட்ட பிறகு, பேராசிரியர் V. ராமகிருஷ்ணன் IIIT கோட்டயத்தின் வழிகாட்டி இயக்குநரானார். மார்ச் 2019 முதல், டாக்டர் ராஜீவ் வி. தரஸ்கர் இந்த நிறுவனத்தின் நிரந்தர இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். எம்.ராதாகிருஷ்ணன் நிறுவனத்தின் பதிவாளர்.
இத்தகைய பெருமைவாய்ந்த ஐஐஐடி கோட்டயத்தில்தான் தற்போது எம்.டெக் ஒருங்கிணைந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கோட்டயம் ஐஐஐடி-யில் ஒருங்கிணைந்த எம்.டெக்., - ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன், பி.சி.ஏ., -எம்.சி.ஏ., பட்டமும் இணைந்து வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதிகள் என்னென்ன:

இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி. தகுதியுடைய டிப்ளமா படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி நிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் டிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவேண்டும். அதந் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் படிப்புகளுக்கு ஜனவரி, 4, 2024 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களைப் பெற https://imtech.iiitkottayam.ac.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறியலாம்.

படிப்பு தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு https://mtech.iiitkottayam.ac.in/pdf/mtech22_brochure.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IIIT Kottayam, An Institution of National Importance by Ministry of Education, Govt. of India under the ambit of IIIT (PPP) Act 2017.The Indian Institute of Information Technology Kottayam (IIIT Kottayam) introduced M Tech programme in AI & Data Science for Working Professionals in Industry. For more details please login into https://imtech.iiitkottayam.ac.in/
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+