இந்தியா இன்டர்நேஷனல் ஆர்பிட்ரேஷன் சென்டர் (IIAC- India International Arbitration Centre) மையத்தில் தலைமைச் செயல் அதிகாரி, உதவி பதிவாளர் (Chief Executive Officer, Assistant Registrar ) போன்ற காலியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஐஐஏசி என்பது இந்திய சர்வதேச நடுவர் மையம் (IIAC) என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய சர்வதேச மத்தியஸ்த மையச் சட்டத்தின் மூலம் இது நிறுவப்பட்டது. இது இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டதாகும். இந்தச் சட்டத்தின் நோக்கம் நிறுவன நடுவர் மன்றத்திற்கு ஒரு சுதந்திரமான மற்றும் தன்னாட்சி ஆட்சியை உருவாக்குவதாகும்.

ஐஐஏசி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இருக்கும் தகராறு தீர்க்கும் செயல்முறைகள் இந்தியப் பொருளாதாரம் மற்றும் இந்தியாவில் வணிகம் செய்வது குறித்த உலகளாவிய பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நோக்கத்திற்காக, தடையற்ற நடுவர் செயல்முறை மூலம் வணிக தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடுநிலை சர்ச்சைத் தீர்வு தளத்தை வழங்குவதன் மூலம் கட்சிகளிடையே (உள்நாட்டு மற்றும் சர்வதேசம்) நம்பிக்கையை ஊக்குவிப்பதை IIAC நோக்கமாகக் கொண்டு சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நிறுவன நடுவர் மன்றத்தில் கணிசமான அறிவும் அனுபவமும் கொண்ட புகழ்பெற்ற நபர்களின் குழுவால் IIAC நிர்வகிக்கப்படுகிறது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி இதன் தலைவராக செயல்படுகிறார்.
இந்த பெருமைமிகு ஐஐஏசி நிறுவனத்தில்தான் தற்போது தலைமைச் செயல் அதிகாரி, உதவி பதிவாளர் (Chief Executive Officer, Assistant Registrar) பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2023, 05.01.2024 ஆகும்.
தலைமைச் செயல் அதிகாரி (Chief Executive Officer) பணியிடத்துக்கு பட்டப்படிப்பும், 20 ஆண்டு அனுபவமும் தேவை. அதிகபட்சமாக 45 வயது மிகாமல் இருக்கவேண்டும்.
உதவி பதிவார் பணிக்கு எல்எல்பி படித்திருக்கவேண்டும். 5 ஆண்டு அனுபவம் தேவை.
அதிகபட்சமாக வயது 45 வயது மிகாமல் இருக்கவேண்டும்.
Chief Executive Officer பணிக்கு ரூ.1,82,200/- முதல் ரூ.2,24,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், Assistant Registrar பணிக்கு ரூ.85,000/- மாத ஊதியமாக தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு(Personal Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி Chief Executive Officer பதவிக்கு 05.01.2024, Assistant Registrar பதவிக்கு 23.12.2023 ஆகும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதள லிங்க்குகளை தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












