புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU) காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU)
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-
உதவிப் பேராசிரியர்
காலிப் பணியிடங்கள் : 51
ஊதியம் : மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரையில்
பேராசிரியர்
காலிப் பணியிடங்கள் : 27
ஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரையில்
இணைப் பேராசிரியர்
காலிப் பணியிடங்கள் : 38
ஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையில்
கல்வித் தகுதி : பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் IGNOU விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ignou.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி : The Director, Academic Co-ordination Division, IGNOU, Maidan Garhi, New Delhi - 110 068
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.10.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 05.11.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ignourec.samarth.edu.in/advertisement.html என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.