இந்திரா காந்தி திறந்தநிலையில் பல்வேறு படிப்புகளில் சேர அழைப்பு...!!

இக்னோ என்று அழைக்கப்படும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்புத்தகுதி, வயது போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.ignou.ac.in எனற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறிந்துகொள்ளலாம்.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஒரு தேசிய பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைக் கொண்டிருக்கும் இப்பல்கலைக்கழகம் 1985-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற சட்டம் 1985-ன்படி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தை இயற்றிய பின்னர் ரூ.2000 கோடி முதலீட்டில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

இக்னோ தொலைதூர மற்றும் திறந்த கல்வி பல்கலைக்கழகமானது, இந்திய மக்களுக்கு சேவை செய்ய இது நிறுவப்பட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் தரமான உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது. இது இந்தியாவில் தொலைதூர மற்றும் திறந்தவெளிக் கல்விக்கான தரங்களை ஊக்குவிப்பது, ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்ணயிப்பது மற்றும் கல்வியின் மூலம் இந்தியாவின் மனித வளத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செவ்வனே செயல்பட்டு வருகிறது.

இந்திரா காந்தி திறந்தநிலையில் பல்வேறு படிப்புகளில் சேர அழைப்பு...!!

கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி தவிர, விரிவாக்கம் மற்றும் பயிற்சி ஆகியவை அதன் கல்வி நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இது ஒரு தேசிய வள மையமாகவும் செயல்படுகிறது, மேலும் இந்தியாவில் தொலைதூரக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது.
இக்னோ பல்கலைக்கழகமானது (IGNOU) சார்க் (SAARC) கூட்டமைப்பின் திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (SACODiL) மற்றும் உலகளாவிய மெகா பல்கலைக்கழக நெட்வொர்க் (GMUNET) ஆகியவற்றின் செயலகங்களை நடத்துகிறது. மேலும், இது ஆரம்பத்தில் யுனெஸ்கோவால் ஆதரிக்கப்பட்டது.

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய ஐந்து மண்டலங்களை அமைப்பதன் மூலம் இக்னோ அதிகாரப் பரவல் செயல்முறையை தொடங்கியுள்ளது. பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய நான்கு தென் மாநிலங்களுக்கு சேவை செய்யும் பிராந்திய தலைமையகத்தின் முதலாவது மையம் கேரளாவின் திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்படுகிறது.

இக்னோவுக்கு திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான வரைவுக் கொள்கையை வகுத்துள்ளது. மேலும், இக்னோ மற்ற நிறுவனங்களுடன் இணைந்து படிப்புகளைத் மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடன் (RAI) இணைந்து சில்லறை தொலைதூரக் கற்றலில் BBA படிப்பையும் இக்னோ வழங்குகிறது.

சமீபத்தில், இக்னோ பல்கலைக்கழகம் BA, BAVTM, BCOM, BSC மற்றும் பிற இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு CBCS முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. புதிய சிபிசிஎஸ் முறைப்படி, முன்பு ஆண்டு முறையில் நடத்தப்பட்ட செமஸ்டர் முறையிலேயே தேர்வு நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும்.
இந்த பெருமைவாய்ந்த இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தான் (இக்னோ) தற்போது பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,-நர்சிங்:

தற்போது இக்னோவில் போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் படிப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயன் ஐடைந்து வருகிறது. இந்தப் படிப்பு குறைந்தது 3 ஆண்டுகளாகவும், அதிகபட்சம் 6 ஆண்டுகளாகவும் இருக்கும.்

இந்தப் படிப்புக்கான பயிற்று மொழி ஆங்கிலமாக இருக்கும்.
தகுதிகள்: பதிவு செய்யப்பட்ட செவிலியராக குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசின் விதிமுறைப்படி, இடஒதுக்கீடு இக்னோ படிப்பில் கடைபிடிக்கப்படுகிறது. இப்படிப்பில் சேர வயதுவரம்பு ஏதும் இல்லை.

பேச்சுலர் ஆப் எஜுகேஷன் - பி.எட் படிப்பு:

தற்போது இக்னோவில் பி.எட். படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அறிவியல், சமூக அறிவியல், வணிகவியல், கலை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது அறிவியல் மற்றும் கணித பாடங்களுடன் பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு கல்வித் தகுதி உடையவர்கள் பி.எட். படிப்பில் சேர்ந்துகொள்ளலாம்.

எஸ்.சி, எஸ்டி., ஓ.பி.சி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு உண்டு. வயதுவரம்பு ஏதும் இல்லை.

பிஎச்.டி. படிப்பு:

தற்போது இக்னோவில் பிஎச்.டி படிப்பிலும் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகினஅறனர்.
குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளவர் பிஎச்.டி படிப்பில் சேரலாம். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், அதற்கு இணையான தகுதியுடைய படிப்பை நிறைவு செய்துள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரத் தகுதி உடையவர்கள்.
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க http://ignou.ac.in/ignou/studentzone/adminssionanouncement/1 எனும் இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். யு.ஜி.சி.,-நெட் / யு.ஜி.சி.,-சி.எஸ்.ஐ.ஆர்.,-நெட் / கேட் / சி.இ.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வில் உரிய தகுதி பெற்றவர்கள் பிஎச்.டி., சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கு டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Indira Gandhi National Open University will be admitting students for Post Basic B.Sc. Nursing (BSCN-PB)Programme, batch commencing from January 2024 throughEntranceTest to be held all over the country on 07thJanuary, 2024. Post Basic B.Sc Nursing is a degree programme for in-service diploma holder Nurses. ThProgrammeisapproved by the Indian Nursing Council (INC)
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+