இக்னோ பல்கலைக்கழகத்தில் 102 பணியிடங்கள் வெயிட்டிங்...!!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ('இக்னோ' பல்கலைக்கழகம்) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஒரு தேசிய பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைக் கொண்டிருக்கும் இப்பல்கலைக்கழகம் 1985-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற சட்டம் 1985-ன்படி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தை இயற்றிய பின்னர் ரூ.2000 கோடி முதலீட்டில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

இக்னோ பல்கலைக்கழகத்தில் 102 பணியிடங்கள் வெயிட்டிங்...!!

இக்னோ தொலைதூர மற்றும் திறந்த கல்வி பல்கலைக்கழகமானது, இந்திய மக்களுக்கு சேவை செய்ய இது நிறுவப்பட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் தரமான உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது. இது இந்தியாவில் தொலைதூர மற்றும் திறந்தவெளிக் கல்விக்கான தரங்களை ஊக்குவிப்பது, ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்ணயிப்பது மற்றும் கல்வியின் மூலம் இந்தியாவின் மனித வளத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செவ்வனே செயல்பட்டு வருகிறது.

கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி தவிர, விரிவாக்கம் மற்றும் பயிற்சி ஆகியவை அதன் கல்வி நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இது ஒரு தேசிய வள மையமாகவும் செயல்படுகிறது, மேலும் இந்தியாவில் தொலைதூரக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது.

இக்னோ பல்கலைக்கழகமானது (IGNOU) சார்க் (SAARC) கூட்டமைப்பின் திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (SACODiL) மற்றும் உலகளாவிய மெகா பல்கலைக்கழக நெட்வொர்க் (GMUNET) ஆகியவற்றின் செயலகங்களை நடத்துகிறது. மேலும், இது ஆரம்பத்தில் யுனெஸ்கோவால் ஆதரிக்கப்பட்டது.

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய ஐந்து மண்டலங்களை அமைப்பதன் மூலம் இக்னோ அதிகாரப் பரவல் செயல்முறையை தொடங்கியுள்ளது. பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய நான்கு தென் மாநிலங்களுக்கு சேவை செய்யும் பிராந்திய தலைமையகத்தின் முதலாவது மையம் கேரளாவின் திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்படுகிறது.

இக்னோவுக்கு திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான வரைவுக் கொள்கையை வகுத்துள்ளது. மேலும், இக்னோ மற்ற நிறுவனங்களுடன் இணைந்து படிப்புகளைத் மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடன் (RAI) இணைந்து சில்லறை தொலைதூரக் கற்றலில் BBA படிப்பையும் இக்னோ வழங்குகிறது.

சமீபத்தில், இக்னோ பல்கலைக்கழகம் BA, BAVTM, BCOM, BSC மற்றும் பிற இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு CBCS முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. புதிய சிபிசிஎஸ் முறைப்படி, முன்பு ஆண்டு முறையில் நடத்தப்பட்ட செமஸ்டர் முறையிலேயே தேர்வு நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில்(இக்னோ பல்கலைக்கழகம்) ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் 50, ஸ்டெனோகிராபர் 52 என மொத்தம் 102 இடங்கள் தற்போது காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு வயதுத்தகுதியாக 21.12.2023 அடிப்படையில் ஜூனியர் அசிஸ்டென்ட் 18 முதல் 27 வயது என்றும், ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்ச்சி முறையாக ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 1,000 செலுத்தவேண்டும். மேலும் மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 600 மட்டும் செலுத்தினாலே போதுமானது.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் டிசம்பர் 22 (21.12.2023) ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு: exams.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IGNOU Recruitment 2023 is out for 102 vacancies of Jr. Assistant cum Typist and Stenographer. Check all the details regrading IGNOU Recruitment 2023 here and apply online by 21st December 2023. Indira Gandhi National Open University (IGNOU) has published the official notification for the IGNOU Recruitment 2023 on the official website. The NTA IGNOU recruitment 2023 is released to recruit eligible candidates on 102 vacancies for the post of Stenographer and Jr. Assistant cum Typist (JAT).The online application window will be open till 21st December 2023 (11:59 PM). Candidates can check the details regarding IGNOU Recruitment 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+