IGCAR Junior Research fellows Recruitment 2022:அணுமின் நிலையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் வாய்ப்பு...!

இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணி 2022

இந்திய அணுசக்கி துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், காலியாக உள்ள 60 இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி, ஆர்வமுள்ள இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளதால், உடனே மறக்காமல் விண்ணப்பிக்கவும்.

இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் வாய்ப்பு…!

நிர்வாகம் : கல்பாக்கம் அணுமின் நிலையம்(indira gandhi centre for atomic research, kalpakkam)

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்

ü இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Junior Research Fellowships)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2022 ( இன்னும் நான்கு நாட்கள்)

பணியிடங்கள் எண்ணிக்கை: 60

கல்வி தகுதி

இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.E/B.Tech/B.SC. Engg/B.SC.Tech/MSC/M.E/M.Tech படித்திருக்க வேண்டும். கல்வி தகுதி தொடர்பாக முழு விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு

காலிப் பணியிடங்களுக்கு 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

Ø தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பெறுவர்.

இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் வாய்ப்பு…!

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவர். எழுத்து தேர்வில் தகுதியுடையவர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வு நாள்

Ø எழுத்துத் தேர்வு - 04.12.2022

Ø நேர்முகத் தேர்வு - 05.12.2022 முதல் 09.12.2022

Ø தகுதியான நபர்கள் பட்டியல் வெளியாகும் நாள் - 12.12.2022

Ø சான்றிதழ் சரிபார்ப்பு - 02.01.2023

இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் வாய்ப்பு…!

விண்ணப்பிக்கும் முறை

IGCAR junior research fellows Recruitment 2022

Ø முதலில் https://www.igcrect.in/rect/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Ø புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

Ø கோரப்பட்ட தகவல்களுடன் விண்ணப்பத்தை பிழையின்றி பூர்த்தி செய்தவுடன், எதிர்கால தேவைக்காக 'பிரிண்ட்' எடுத்து கொள்ள வேண்டும்.

Ø பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பிரிண்ட் அவுட்டில் ஒட்டி கையொப்பமிட வேண்டும்.

தேவையான ஆவணங்களை நகலுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Assistant Personnel Officer [R],

Recruitment Section,

Indhira Gandhi Center Atomic Research, Kancheepuram District,

Kalpakkam - 603 102,

Tamilnadu.

வயது வரம்பு, கூடுதல் சலுகை, கல்வி தகுதி, ஆராய்ச்சி காலம் ஆகிய விவரங்களை விரிவாக அறிய கிளிக் செய்யவும்....!

http://www.igcar.gov.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/http://www.igcar.gov.in/recruit/JRF_Adv01_2022.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that you can apply for Junior research fellowships at Chennai Kalpakkam Nuclear Power Plant.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X