சென்னையில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 729 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10, 2ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ரயில்பெட்டி தொழிற்சாலை (ICF Chennai)
மொத்த காலிப் பணியிடங்கள் : 729
பணி : Apprentices
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 15 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ICF அப்ரண்டிஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித் தொகையாக ரூ.6,000 முதல் ரூ.7,000 வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 26.10.2021 தேதிக்குள் https://pb.icf.gov.in/act/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.100
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் மெரிட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://pb.icf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












