மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (CIBA) காலியாக உள்ள Young Professional - II பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR CIBA)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : Young Professional - II
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc. (Zoology), M.Sc (Microbiology), M.F.Sc, B.Tech (Biotech), M.Sc. (Biotechnology) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பத்தாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிபுடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ciba.res.in/ அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












