ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே !

Posted By:

ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் பணிகளின் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் மொத்தம் 1315 காலியிடங்கள் நிரப்பபடுகின்றன.

ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க வங்கி தேர்வுகள்  தொடங்கலாம்

ஐபிபிஎஸ் தேர்வுக்காக படித்து கொண்டிருக்கின்றிர்களா விண்ணப்பிக்க தொடங்குங்கள் ஐபிபிஎஸ் விண்ணப்பத்தேதி நவம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 7 ஆம் தேதி விண்ணப்பிக்க தொடங்கும் வங்கி தேர்வர்கள் நவம்பர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

ஐபிபிஎஸ் நடத்தும் ஸ்பெஷலிஸ்ட் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது 20 வயது முதல் 30 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும். அந்தந்த பிரிவுகளுகேற்ப வயது வரம்பு தளர்வு உண்டு .

பணிகள்:

ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் அக்ரி கல்சர், ஐடி, அக்ரி ஃபீல்டு ஆஃபிஸர், ராஜ்ய பாஷா அதிகாரி, ஹெச்ஆர், மார்கெட்டிங், லா ஆஃபிஸர் உள்ளிட்டோர் தேவைப்படுகின்றனர்.

ஐடி ஆஃபிஸர் 12 பேர்

அக்ரிகல்ச்சர் பீல்ட் ஆஃபிஸர் 875 பேர்

ராஜ்ய பாஷா அதிகாரி 30 பேர்

லா ஆஃபிஸர் ஸ்கேல் 60 பேர்

ஹெச் ஆர் 35 பேர்

மார்கெட்டிங்க் ஆஃபிஸர் 195 பேர்

இவ்வாறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படுள்ளது.

ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் வங்கி பணிக்கு விண்ணப்பிப்போர்களுக்கு
விதிமுறைப்படி சம்பளம் அறிவிக்கப்படும். கல்வித்தகுதியாக அந்தந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

விருப்பமுள்ளோர் நவம்பர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து விண்ணப்ப கட்டணங்களை முறைப்படி செலுத்தவும் . ஐபிபிஎஸ் அதிகாரபூர்வ இணைய தள இணைப்பை இணைத்துள்ளோம். அத்துடன் ஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான அறிவிக்கை இணைப்பை கொடுத்துள்ளோம் . ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப படிவ இணைப்பும் கொடுத்துள்ளோம் .

சார்ந்த பதிவுகள்:

வங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு!!

ஐபிபிஎஸ் பிஒ வங்கிப்பணி தேர்வு எழுத அட்மிட் கார்டு வெளியீடு !! 

நாடு முழுவதுமுள்ள பொதுவுடமை வங்கிகளின் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் அறிவிப்பு

English summary
here article tell about job opportunity of bank exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia