வங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு!!

Posted By:

வேலை,, வேலை,, வங்கியில் வேலை !! ஐபிபிஎஸின் கீழ் இயங்கும் வங்கிகளுக்கு கிளார்க் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு வங்கியில் வேலை பார்க்கும் கனவு கொண்டவர்களுக்கான நேரம் . இதுவரை வங்கி தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லையா வாய்ப்புகள் அனைத்தும் கைநழுவி விட்டதா கவலை வேண்டாம் , மீண்டும் ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பில் நிச்சயம் நீங்க வெற்றி பெறுவீங்க உங்களுக்கான தேர்வு அறிவிப்பு படியுங்க வெற்றி பெறுங்க , கேரியர் இந்தியா உங்களுக்கான வேலை வாய்ப்பை தகவல்களை எப்போதும் உங்க் கை தளத்தில் தவழ வைக்கும் .

வங்கி தேர்வு கனவு கொண்டவர்களுக்கான  ஐபிபிஎஸ் அறிவிப்பு

ஐபிபிஎஸ் பிஒ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் முடிந்த வேலையில் மீண்டும் உங்களுக்கான ஐபிபிஎஸ் கிளாரிக்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானதில் மகிழ்ச்சி பொங்கும் என்று நம்புகிறேன்.

பணியிடங்கள் , தேர்வு:

ஐபிபிஎஸ் பணியிடங்கள் மொத்தம் தோரய கணக்கான 7875 பணியிடங்கள் நிரப்பபடுகிறது . கிளாரிகள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 3 வரை விண்ணப்பிக்கலாம் . ஐபிபிஎஸ் பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 பொது பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும் . ஐபிபிஎஸ் தேர்வுகள் 2.12.2017 மற்றும் 3.12.2017, 9.12.2017 ,10.12.2017, பிரிளிம்ஸ் தேர்வுகள் நடைபெறும் . மெயின் தேர்வு 21.1.2018 ஆம் தேதி நடைபெறும் .

தகுதிகள் :

ஐபிபிஎஸ் தேர்வில் பங்குபெற எதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வங்கிப்பணிக்கான தேர்வில் பங்கேற்க 20 முதல் 28 வரை இருக்க வேண்டும் . எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும், ஒபிசி பிரிவினர், பொது பிரிவினருக்கு 3 வருடமும் வயதுவரம்பு தளர்வு உண்டு .

வங்கிகனவை வாழ்வாக கொண்டோரும் வங்கி தேர்வை எதிர்கொள்ள நினைப்போருக்கும் விண்ணப்பிக்க தொடங்கலாம் எதேனும் தேர்வு தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ஐபிபிஎஸ் இணையதளமான www.ibps.in தளத்தில் அறிந்துகொள்ளவும் .

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பிஒ காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு 

ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி 2017 வேலை வாய்ப்பு வந்து விட்டது.... 14192 காலியிடங்கள் காத்திருக்கின்றன. 

நாடு முழுவதுமுள்ள பொதுவுடமை வங்கிகளின் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் அறிவிப்பு

English summary
here article tell about ibbs job notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia