நமது நாட்டின் உளவுத்துறையில் (IB) உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி (Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கு https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யவும்
மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள்விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களில் ஒன்றாகும். இவ்வமைச்சகத்தின் பணிகள் பல்வேறாக இருந்தாலும் முக்கியமாக உள்நாட்டின் பாதுகாப்பையும், உள்நாட்டுக் கொள்கையையும் உறுதிசெய்வதாகும். மாநில அரசியல் அமைப்பு உரிமைகளுக்குட்பட்டு மனிதவளம், நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது.

இதன் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். உள்துறை இணை அமைச்சர்களும், இந்தியக் குடிமையியல் அதிகாரிகளான செயலர்களும் இவ்வமைச்சகத்தில் செயல்படுகின்றனர்..
உறுதியான மற்றும் வளமான நாடாக இந்தியா வளர, நாட்டின் அமைதியும், ஒற்றுமையும் கருத்தில் கொண்டு இந்த வமைச்சகம் பல்வேறு முக்கிய நோக்கங்களைக் கொண்டு திறமையான முறையில் செயல்பட்டு வருகிறது
ராணுவம், கிளர்ச்சி மற்றும் தீவிரவாதம் உட்பட உள்நாட்டு அச்சுறுத்தல்களை நீக்குதல், சமூக ஒற்றுமையை உண்டாகுதல், பாதுகாத்தல், உறுதிசெய்தல், சட்டத்தை அமலாக்கி தகுந்த நேரத்தில் நீதியைக் காத்தல்,
குற்றங்கள் நிகழாத சமுதாயத்தை அமைத்தல், மனித உரிமையை நிலைநிறுத்தல், இயற்கை மற்றும் மனித பேரழிவுகளால் உண்டான இழப்புகளை சீர்செய்தல் ஆகிய முக்கிய பணிகளைச் செய்கிறது.
இப்பணிகளைச் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்திய உளவுத்துறை (ஐபி), தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ)
தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு,
பன்னோக்கு முகமை மையம், தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு, கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம், டெல்லி காவல்துறை ஆகியவை இதன் கீழ் இயங்கி வருகின்றன.
1968 ஆம் ஆண்டு வரை, உளவுத்துறை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை இரண்டையும் கையாண்டது, அதன் பிறகு குறிப்பாக வெளிநாட்டு உளவுத்துறைக்காக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா உளவு அமைப்பு) உருவாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து உளவுத்துறை (IB) முதன்மையாக உள்நாட்டு உளவுத்துறை மற்றும் உள்நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டது.
1885 ஆம் ஆண்டில், மேஜர் ஜெனரல் சார்லஸ் மேக்ரிகோர் என்பவர், சிம்லாவில் உள்ள பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் அவர், அதன் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு பொறுப்பானார். வடமேற்கில் இருந்து பிரிட்டிஷ் இந்தியா மீதான படையெடுப்பைத் தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தானில் ரஷ்ய துருப்புக்களை கண்காணிப்பதே அக்காலத்தில் இந்த உளவுத்துறைக்கு முக்கிய பொறுப்பாக இருந்தது.
பின்னர் 1887-ம் ஆண்டு டிசம்பரில், பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலாளரால் மத்திய சிறப்புப் பிரிவின் துணைப் பிரிவாக உளவுத்துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் உளவுத்துறை, நாட்டின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது நாட்டின் உளவுத்துறையில்தான் தற்போது உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி (Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 995 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுக்தகுதி:
18 வயது பூர்த்தியான 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து டிசம்பர் 15-ம் தேதிக்குள் (15.12.2023) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணியிடம் தொடர்பான விளம்பரத்தைக் காண
https://drive.google.com/file/d/1_9JGhE1j1Sqohnvd8vcVPyPcXZjiEQga/view என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கு
https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications












