நீலகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆய்வக உதவியாளர்
துறை : Assessment and utilization of Yellow Gypsum in agriculture under variable environment என்னும் திட்டத்திற்காக ஆய்வக மற்றும் கள உடனாள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், பெண்கள், ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை : நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 19 மார்ச் 2020
நேர்காணல் நடைபெறும் இடம் : ICAR - IARI, Regional Station, Wellington643 231.
மேற்கண்ட இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம்.