விளையாட்டு வீரர்களுக்கு விமானப்படையில் வேலை!

Posted By: Kani

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய விமானப்படையில் சிறப்பு பணி நியமனமாக குரூப் 'ஒய்' பிரிவிலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: குரூப் 'ஒய்' பிரிவிலான பணி

விளையாட்டு பிரிவு தகுதி: அத்லடிக்ஸ், பேஸ்கட் பால், குத்துசண்டை, கிரிக்கெட், சைக்ளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, கபாடி, லான் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து , மல்யுத்தம், பளுதுாக்குதல், கோல்ப் போன்ற விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 07 ஜூலை 1997- 27 ஜூன் 2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஏர் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

SECRETARY, AIR FORCE SPORTS CONTROL BOARD

C/O AIR FORCE STATION NEW DELHI, RACE COURSE, NEW DELHI - 110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.05.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள் போன்ற முழுமையான விபரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அறிவிப்பு லிங்க்: இதைக் கிளிக் செய்து முழுமையான அறிவிப்பு விவரத்தை பெறலாம்.

விண்ணப்பித்துவிட்டீர்களா? பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி!

English summary
IAF Sports Quota Recruitment 2018 Airmen in Group Y Trades

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia