How to check TN Board 12th Result 2023: ஆர்.யூ.ரெடி.. எவ்வாறு பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்ப்பது...!

தமிழ்நாட்டில், மாநில பாடத்திட்டத்தில் படித்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே.8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது எவ்வாறு என்பதை, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது. அதுகுறித்து விரிவாக பார்ப்போம்?

பிளஸ் 2 தேர்வு முடிவகளை பார்க்க தெரியும்...?

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது.

தேர்வுகளை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள்‌ 23,747 பேர், மாற்றுத்‌ திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என, மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக இருந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து, மொத்தம் 8 லட்சத்து 51,303 மாணவர்கள் எழுதினர்.

மாணவர்களுக்கு, மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவர்களைக் கண்காணிக்க, 46,870 அறைக் கண்காணிப்பாளர்களும், 3,100 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

'ஆப்சென்ட்'

தமிழ் மொழிப் பாடத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோல 45 ஆயிரம் பேர் ஆங்கிலப் பாடத் தேர்வையும் எழுத வரவில்லை.

மேலும், இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சியான தகவலை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வையே, மாணவர்கள் எழுதாதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மே.8ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் காலை 8 மணிக்கு வெளியாகும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதுகுறித்த அறிவிப்பை, அரசு தேர்வு துறை இயக்குநர் சேதுராம வர்மா, கடந்த ஓரிரு நாள்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

அதன் விபரம்

பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே.8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுவார்.

தேர்வு முடிவுகள் அறியும் முறை....!

தேர்வு முடிவுகளை மாணவர்கள்

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in

ஆகிய இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தேர்வுக்காகப் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ஸ்....

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN + 2 Results 2023: Tamil Nadu Government Examinations Directorate has announced that the examination results for the students who studied in the state curriculum and wrote the Plus Two public examination will be published on May 8. The examination results will be announced at 9.30 am by Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poiyamozhi. Let's see the details of how to know below..?
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+