எளிய முறையில் எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை பெறுவது எப்படி: 2018-ல் 8301 காலியிடங்கள்

Posted By: Kani

பாரத ஸ்டேட் பேங்கில் வேலை பார்க்க வேண்டும் என்று பலருக்கும் கனவு உண்டு. பட்டப்படிப்பு படிக்கும்போதே பாரத் ஸ்டேட் பேங்கில் சேருவதற்கு தயாராகிவிடுகிறார்கள். நிரந்தர வேலை, சமூகத்தில் மரியாதை என்பதால் வங்கி வேலையில் (bank jobs) சேர பலரும் விரும்புகிறார்கள். வங்கி ஊழியர் என்றால் சமூகத்தில் நல்ல மரியாதை உள்ளது.

வங்கி வேலையில் சேர்ந்த பிறகு அவர்களின் லைப்ஸ்டைல் மாறிவிடுகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.தேர்வு முறை

எளிய முறையில் எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை பெறுவது எப்படி: 2018-ல் 8301 காலியிடங்கள்

மூன்று வகையான தேர்வு முறைகள் உள்ளன. அவை:

1. முதல்கட்ட எழுத்து தேர்வு(ப்ரிலிம்ஸ்)
2. மெயின் எழுத்து தேர்வு
3. தேர்வு செய்யப்பட்ட உள்ளூர் மொழிக்கான தேர்வு

முதல்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி:

முதல்கட்ட தேர்வில் ஆன்லைனில் மூன்று பிரிவுகளில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 20 நிமிடங்கள் அளிக்கப்படும். கடின உழைப்பை விட ஸ்மார்ட் உழைப்பு தான் தேவை. முதலில் எளிதான கேள்விகளை தேர்வு செய்துவிட்டு பின் கடினமான கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. அதனால் பதில் தெரியாவிட்டால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் என்பது கிடையாது.

தேர்வு முறை மற்றும் மாதிரி கேள்விகள்- எஸ்.பி.ஐ. கிளார்க் முதல்கட்ட மாதிரி தேர்வு (SBI Clerk Prelims Mock Test)

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி:

முதல்கட்ட தேர்வில்(ப்ரிலிம்ஸ்) தேர்ச்சி அடைந்தவர்கள் மெயின் தேர்வு எழுத முடியும். மெயின் தேர்வில் 5 பிரிவுகள் உள்ளன. தேர்வு நேரம் 2 மணிநேரம் 40 நிமிடங்கள் ஆகும். தேர்வுக்கு தயார் செய்ய தினமும் செய்தித்தாள்கள் படிக்க வேண்டும். தினமும் தயார் செய்தால் தான் தேர்ச்சி பெற முடியும். உங்களின் பலம் மற்றும் பலவீனமான சப்ஜெக்ட்டை கண்டுபிடித்து ஒர்க்அவுட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் எஸ்.பி.ஐ. ஊழியராகும் வாய்ப்பு ஏற்படும்.

தேர்வு முறை மற்றும் மாதிரி கேள்விகள்- எஸ்.பி.ஐ. கிளார்க் முதல்கட்ட மாதிரி தேர்வு (SBI Clerk Mains Mock Test)

தேர்வு செய்யப்பட்ட உள்ளூர் மொழிக்கான தேர்வு:

உள்ளூர் மொழிக்கான தேர்வு எழுதுபவர்கள் 10 மற்றும் 12வது வகுப்புகளில் அந்த மொழியை படித்திருக்க வேண்டும்.

எஸ்.பி.ஐ. கிளார்க் தேர்வு

எஸ்.பி.ஐ. கிளார்க் தேர்வு 2018ல் நான்கு முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை ஆப்டிடியூட், ரீசனிங், ஆங்கிலம் மற்றும் பொது விழிப்புணர்வு. ஒவ்வொரு பிரிவிலும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

குவான்டிடேடிவ் ஆப்டிடியூட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்:

20ம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்ய வேண்டும். 1 முதல் 30 வரையிலான ஸ்கொயர் ரூட் வேல்யூக்களையும் கற்க வேண்டும். 1 முதல் 15 வரையிலான க்யூப் ரூட் வேல்யூக்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மனக்கணக்கு போடும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நெகட்டிவாக யோசிக்காமல் கணக்குகளுக்கு விடை காண முயற்சிக்க வேண்டும்.
தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களின் வினாக்களை தினமும் 2 முதல் 3 மணிநேரம் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி ஆப்டிடியூட் கேளிவிகளுக்கான லிங்க் கீழே உள்ளது.

குவான்டிடேடிவ் ஆப்டிடியூட் கேள்விகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும். Click Here for Quantitative Aptitude Questions

பகுத்தறிவு திறன் பகுதியில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்

உங்களின் அடிப்படை பகுத்தறிவு திறனை பயிற்சி மூலம் மேம்படுத்தவும்.
ஒரே தலைப்பில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
உங்களின் துல்லியம் மற்றும் வேகத்தின் அடிப்படையில் தான் மதிப்பெண் உள்ளது.
பகுத்தறிவுக்கு எங்களின் ஐபிபிஎஸ் ப்ரிலிம்ஸ் மாக் டெஸ்டை பயன்படுத்தவும்.

முந்தைய ஆண்டு ஐபிபிஎஸ் ப்ரிலிம்ஸ் பேப்பர்களையும் பார்க்கவும்

பகுத்தறிவு பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெற கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் இருக்கும் கேள்விகளை வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.

பகுத்தறிவு திறன் கேள்விகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும். Click Here for Logical Reasoning Questions

ஆங்கில மொழி பாடத்தில் தேர்ச்சி பெற டிப்ஸ்

உங்களுக்கு வசதியான தலைப்பை முதலில் தேர்வு செய்யவும்
உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக வரும் என்றால் அதை முதலில் துவங்கவும். ஆங்கிலம் அவ்வளவாக வராது என்றால் பிற பகுதி வினாக்களுக்கு பதில் அளித்துவிட்டு ஆங்கில மொழி கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.
ரீடிங் காம்ப்ரிஹென்சன் கேள்விகளுக்கு அங்கு கொடுக்கப்பட்டுள்ள பாராவின் அர்த்தத்தை புரிந்து கொண்ட பிறகு பதில் அளிக்க முயற்சி செய்யவும்.
தேர்வு பற்றி தெரிந்து கொள்ள எஸ்.பி.ஐ. கிளார்க் மாடல் பேப்பர்களை வைத்து பயிற்சி செய்யவும்.
ஆங்கில பகுதி தான் பலருக்கும் பிரச்சனையாக இருக்கும். அந்த பகுதியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஆங்கில வாசிப்பு திறமையை மேம்படுத்தவும்.

ஆங்கில கேள்விகளுக்கு பயிற்சி பெற இங்கே க்ளிக் செய்யவும். Click Here to Practice English Questions

தேர்வு பயத்தை வெல்ல சில டிப்ஸ்

துல்லியமாக இருப்பது எந்த தேர்விலும் வெற்றி பெற உதவும்.
நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
எஸ்.பி.ஐ. கிளார்க் சிலபஸில் எதையும் புறக்கணிக்க வேண்டாம்
தேர்வின் துவக்கத்தில் இருந்தே வேகமாக செயல்படவும்.
நேரம் அதிகம் தேவைப்படாத தலைப்புகளை முதலில் தேர்வு செய்யவும்.
கடைசி நேரத்தில் டென்ஷனாகி எழுத வேண்டாம்.
பாசிட்டிவாக யோசித்து, அமைதியாக இருக்கவும்.

English summary
Most of the individuals have their dream to become a SBI Employee. Almost every candidate has started their preparations during their graduations. Individuals wish for the bank jobs due to its nature of the work, the job security and the social respect.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia