தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சமீப நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையினால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து பொது மக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (நவம்பர் 12ம் தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
school பள்ளி anna university exam education tamilnadu அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு பல்கலைக் கழகம் தமிழ்நாடு கல்வி
English summary
Holidays for school and colleges tomorrow due to heavy rain!
Story first published: Thursday, November 11, 2021, 14:33 [IST]


Click it and Unblock the Notifications












