அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி!

Posted By: Kani

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆய்வக உதவியாளர்

காலியிடங்கள்: 20

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். என்ஏசி சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21-05-2018

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதல்வர்,
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,
உத்தப்பநாயக்கனூர்,
உசிலம்பட்டி,
மதுரை-625537

மேலும் விவரங்களுக்கு  இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

 

குறிப்பு: பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 21-05-2018 மாலை 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கால தாமதமாக பெறப்படும் தாபல்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு குறித்த விவரங்கள் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் இணையதளத்தை அவ்வப்போது பார்த்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பெல் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை!

English summary
Govt Polytechnic College Usilampatti invites application for Lab Technician Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia