தமிழ்நாடு அரசு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் மூத்த தரவு ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் [email protected] என்ற இமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
இந்த சிறப்புவாய்ந்த தமிழ்நாடு அரசு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில்தான் தற்போது மூத்த தரவு ஆய்வாளர் பணியிடம் காலியாக உளளது.
இங்கு மொத்தம் 2 காலியிடங்கள் மட்டுமே உள்ளன. சம்பளமா க மாதம் ரூ.60,000 வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
தகவல் தொடர்பியல்,கணினி அறிவியல் மற்றும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி துறை சாராத பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்தாலும் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, காமராஜர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை - 600 005.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது சுயவிவர கடிதம், முகப்பு கடிதம் போன்ற [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: வரும் மார்ச் 2-ம் தேதியாகும் (2.3.2024).
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு www.scd.tn.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












