இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு கோவா கப்பல் கட்டும் தளத்தில் வேலை காத்திருக்கிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு goashipyard.in என்ற இணையதள முகவரியை அணுகி போதிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (ஜிஎஸ்எல்) என்பது கோவாவின் வாஸ்கோடகாமாவில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டுமான நிறுவனமாகும். இது 1957 இல் நிறுவப்பட்டது, முதலில் இந்தியாவில் போர்த்துகீசியர்களின் காலனித்துவ அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
1961 ஆம் ஆண்டு கோவாவை இந்தியா இணைத்ததைத் தொடர்ந்து போர்ச்சுகல் தோல்வியடைந்து இந்தியாவிடம் நிபந்தனையின்றி சரணடைந்ததை அடுத்து, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு போர்க்கப்பல்களை தயாரிக்க நிறுவனம் பயன்படுத்தப்பட்டது.

கப்பல் கட்டுமானத்தில் சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஜிஎஸ்எல் அதன் வளாகத்தை நவீனமயமாக்கி உள்ளது. இந்த நோக்கத்திற்காக நன்கு அறியப்பட்ட கப்பல் கட்டுபவர்களுடன் ஒத்துழைப்பதற்கான ஒரு ஏற்பாட்டுக்காக பேச்சுவார்த்தையை நிறுவனம் நடத்தி வருகிறது. இன்றுவரை நிறுவனம் 167 கப்பல்களை உருவாக்கியுள்ளது, இதில் விசைப்படகுகள், இழுவைகள், தரையிறங்கும் கப்பல்கள், கடல் ரோந்து கப்பல்கள் அடங்கும். மேலும், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மற்றும் யேமன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மற்ற கப்பல்களை கட்டி வருகிறது இந்த நிறுவனம்.
இந்த பெருமைவாய்ந்த கோவா கப்பல் கட்டும் தளத்தில்தான் தற்போது பல்வேறு பிரிவுகளில் பணிகள் காலியாக உள்ளன. மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 12, எலக்ட்ரிக்கல் 7, எலக்ட்ரானிக்ஸ் 3, நாவல் ஆர்க்கிடெக்சர் 10, எச்.ஆர்., 3, பைனான்ஸ் 3 என மொத்தம் 38 இடங்கள் உள்ளன.
கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இங்குள்ள எச்.ஆர்., பணிக்கு எம்.பி.ஏ., பைனான்ஸ் பணிக்கு சி.ஏ., / ஐ.சி.எம்.ஏ., மற்ற பணிகளுக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 30.11.2023 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பவோர் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசிநாள்:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் (2.2.2024 மாலை 5:00 மணி) அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு goashipyard.in என்ற இணையதள முகவரியை அணுகி போதிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












