ரூ.40 ஆயிரத்தில் எஃப்.சி.ஐ.,யில் ட்ரைனிங் ?

நாட்டில் உள்ள குடிமக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய பணியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில், மண்டல வாரியாக காலியாக உள்ள 113 மேலாளர் பணிகளில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்: இந்திய உணவு கழகம் (Food Corporation of India)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.09.2022

பயிற்சி காலத்தில் ரூ.40 ஆயிரம் ?

பணி விவரங்கள்

மேலாளர்

வடக்கு மண்டலம்- 38

தெற்கு மண்டலம் - 16

மேற்கு மண்டலம் - 20

கிழக்கு மண்டலம் - 21

வட கிழக்கு மண்டலம் - 18

விண்ணப்பக்கட்டணம்

மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விண்ணப்பக் கட்டண தளர்வுகள் இன்ன பிற சலுகைகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

பணியிடங்களுக்கு, இணையதள தேர்வு, நேர்காணல் மற்றும் பயிற்சி அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

கல்வி தகுதி

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில், பணி சார்ந்த பாடப்பிரிவில் பி.இ., பி.டெக்., அல்லது எம்.பி.ஏ., ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி காலத்தில் ரூ.40 ஆயிரம் ?

பொதுவான தகவல்

தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு ஆகிய மண்டலங்கள் வாரியாக, நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு தளர்வு, தேர்வு நடைமுறை உள்ளிட்ட விவரங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளடக்கிய வடக்கு மண்டத்தில், 38 காலிப்பணியிடங்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளடக்கிய தெற்கு மண்டத்தில் 16 காலிப்பணியிடங்களும், பீகார், ஜார்கண்ட் உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில், 21 காலிப் பணியிடங்களும், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 20 காலிப்பணியிடங்களும், அசாம், மணிப்பூர் உள்ளடக்கிய தென்கிழக்கு மண்டலத்தில், 18 என, மொத்தம் 113 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணையதளத்தில், நேரடி ஆன்லைன் இணைப்பின் வாயிலாக 29.09.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு

01.08.2022 படி, மேலாளர்(ஹிந்தி) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள்ளும் இருப்பது கட்டாயம் ஆகும்.

ஊதியம்

மேலாளர் பணிக்கு தேர்வாகும் நபர்கள், பயிற்சி காலத்தில் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை, மாதம் ஒன்றுக்கு ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்களை அறிய, கீழே சொடுக்கவும்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இணையதளம்

https://www.recruitmentfci.in/current_category_two_main_page.php?lang=en

https://www.recruitmentfci.in/assets/current_category_II/Advt. No.02-2022-FCI Category-II.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Food Corporation of India, also known as FCI, invites applications for Manager vacancies in Civil Engineering, Electrical Mechanical Engineering, etc.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X