எஃப்.சி.ஐ.,யில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்பு...!

நாட்டில் உள்ள குடிமக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய பணியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில், நாடு முழுவதும் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பணிகளில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

மொத்தம் உள்ள 5043 காலிப் பணியிடங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் காலிப் பணியிடங்கள்

நிர்வாகம்: இந்திய உணவு கழகம் (Food Corporation of India)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 5.10.2022

பணி விவரங்கள்

இளநிலை பொறியாளர்(Junior Engineer)

உதவியாளர்(Assistant Grade)

சுருக்கெழுத்தர் (Steno)

காலிப் பணியிடங்கள்: 5043

இளநிலை பொறியாளர் (J.E. (Civil Engineering)

காலியிடங்களின் எண்ணிக்கை : 48

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்
சிவில் இன்ஜினியரிங் பட்டம் அல்லது டிப்ளமோவில் தேர்ச்சி பெற்று, ஓராண்டு அனுபவம் பெற்றிருத்தல் அவசியமாகும்.

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 34,000- 1,03,400

இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) J.E. (Electrical Mechanical Engineering)

காலியிடங்களின் எண்ணிக்கை : 15கல்வித்

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical Engineering or Mechanical Engineering அல்லது Diploma in Electrical Engineering or Mechanical Engineering தேர்ச்சி பெற்று,ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 34,000- 1,03,400

சுருக்கெழுத்தாளர்(Stenographer - II)

காலியிடங்களின் எண்ணிக்கை : 73கல்வித்

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் சுருக்கெழுத்தும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 30,500- 88,100

உதவியாளர்(Assistant (General)

காலியிடங்களின் எண்ணிக்கை : 948கல்வித்

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 28,200- 79,200

உதவியாளர்(கணக்கு) Assistant (Accounts)

காலியிடங்களின் எண்ணிக்கை : 406

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.com படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 28,200- 79,200

உதவியாளர்(டெக்னிக்கல்) Assistant (Technical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1406

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc. in Agriculture or B.Sc in Botany / Zoology / Bio-Technology / Bio-Chemistry / Microbiology / Food Science/ or B. Tech / BE in Food Science / Food Science and Technology / Agricultural Engineering / Bio-Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி

01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 28,200- 79,200

உதவியாளர்(டெபோட்) Assistant (Depot)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2054

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 28,200- 79,200

உதவியாளர்(ஹிந்தி) Assistant (Hindi)

காலியிடங்களின் எண்ணிக்கை : 93

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 28,200- 79,200

5 ஆயிரம் காலிப் பணியிடங்கள்

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும் கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். ஒரு சில பதவிகளுக்கு முதன்மைத் தேர்வு உண்டு.

பொதுவான தகவல்

தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு ஆகிய மண்டலங்கள் வாரியாக, நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு தளர்வு, தேர்வு நடைமுறை உள்ளிட்ட விவரங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளடக்கிய வடக்கு மண்டத்தில், 2,388 காலிப்பணியிடங்களும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளடக்கிய தெற்கு மண்டத்தில், 989 காலிப்பணியிடங்களும், பீகார், ஜார்கண்ட் உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில், 768 காலிப் பணியிடங்களும், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில், 713 காலிப்பணியிடங்களும், அசாம், மணிப்பூர் உள்ளடக்கிய தென்கிழக்கு மண்டலத்தில், 185 என, மொத்தம் 5043 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு காலிப் பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணையதளத்தில், நேரடி ஆன்லைன் இணைப்பின் வாயிலாக 05.10.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முழு விவரங்களை அறிய, கீழே சொடுக்கவும்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இணையதளம்

https://fci.gov.in/pageDetail.php?view=333

https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL CAT-III ADVT (2022) Final.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Food Corporation of India (FCI) is inviting applications for Assistant, Junior Engineer, Stenographer vacancies across the country.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X