மத்திய அரசின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நர்ஸ் வேலையிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த பெருமைவாய்ந்த மத்திய அரசின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில்தான் தற்போது நர்சிங் ஆபிசர் பிரிவில் 1930 இடங்கள் உள்ளன.

நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: பி.எஸ்சி., நர்சிங் முடித்துவிட்டு, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது GNM டிப்ளமோ முடித்த பின் நர்சிங் கவுன்சிலில் பதிவு, குறைந்தது 50 படுக்கை மருத்துவமனையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 27.3.2024 அடிப்படையில் 18 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலுார், புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 25 செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
கடைசிநாள்: வரும் 27.3.2024 மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.
இணையதள முகவரி : கூடுதல் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












