மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC)
நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்
பணி : பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 18
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 67 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.1,01,000 முதல் ரூ.1.77,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 12.08.2021 மற்றும் 13.08.2021 ஆகிய தேதிகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் குறிப்பிட்ட ஆவனங்களுடன் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Conference Hall, 3rd floor, ESIC Medical College & Hospital, Chennai - 600 078
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.300
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டவர், பெண் விண்ணப்பதாரர்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.esic.nic.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












