வேலைக்காக காத்திருப்பவரா நீங்கள்..? இஎஸ்ஏஎஃப் வங்கியில் 3 ஆயிரம் பணியிடம் காலி!

Posted By: Kani

கேரள மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஎஸ்ஏஎஃப் சிறிய நிதி வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 21-05-2018க்குள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3000

பணியிடம்: கேரளா

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. அலுவலக தலைமை அதிகாரி- 220 
2. உதவி அலுவலக தலைமை அதிகாரி - 220
3. விற்பனை அதிகாரிகள் - 1500
4. ரிலேஷன்சிப் அதிகாரி  - 400
5. கிரெடிட் அதிகாரி - 100
6. விற்பனை அதிகாரி டிரெயினி - 560

வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் வேலை!

English summary
Esaf bank invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia