தமிழக அரசிற்கு உட்பட்டு ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள நன்னடத்தை அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.21 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சட்டம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : நன்னடத்தை அலுவலர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BL, LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.21,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://erode.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 6,
முன்னால் படைவீரர் மாளிகை,
2வது தளம், ஈரோடு-638001.
தொலைபேசி : 0424 - 22250100
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது 0424 - 22250100 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












