தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.,) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்தான் (இ.பி.எப்.ஓ) தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இங்கு தற்போது தனி உதவியாளர் பிரிவில் 323 இடங்கள் உள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, நிமிடத்துக்கு 120 வார்த்தை தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 27.3.2024 அடிப்படையில் 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய முறைகளின் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
கடைசிநாள்: வரும் 27.3.2024 மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












