நீங்கள் இன்ஜினீயரா.... இபிஎஃப்ஓ-வில் வேலை ரெடி....!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) ஜூனியர் இன்ஜினீயர் (Junior Engineer -Civil / Electrical) பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களைப் பெற https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/JE_Advertisement_14122023.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாத சம்பளத்தில் முதலாளி சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்தப் பங்களிப்புப் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் இன்ஜினீயரா.... இபிஎஃப்ஓ-வில் வேலை ரெடி....!!

அரசாங்கம், தொழிலாளர்கள், ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் சேமநல நிதி ஆகும். இந்தியாவில் தொழிலாளர் சேமநல நிதி 1952 -ல் ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது . ஊழியர்களின் அடிப்படை சம்பளம்(Basic Salary), அகவிலைப்படியில்(Allowances) 12% தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும் . தனியார் நிறுவனங்களில் பணியாளரிடம் இருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் வழங்கும். இது தவிர, பணியாளர் விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை கூடுதலாக தொழிலாளர் சேமநல நிதி கணக்கில் பிடிக்கச் சொல்லலாம். ஆனால், இந்த தொகைக்கு இணையாக நிறுவனம் எந்தத் தொகையும் செலுத்தாது.

தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்திற்கான எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்கு கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.65% வட்டி தரப்படுகிறது. இன்றைய தேதியில் 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதிப் பிடித்தம் கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டம்.

இந்தச் சிறப்பு வாய்ந்த இபிஎஃப்ஓ அமைப்பில்தான் தற்போது ஜூனியர் இன்ஜினீயர் (Junior Engineer -Civil / Electrical) பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஜனவரி 27-ம் தேதியாகும் (27.01.2024)

கல்வித்தகுதி:

இந்தப் பணியிடத்துக்கு சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Civil Engineering, Electrical Engineering) பாடப்பிரிவில் டிப்ளமோ (Diploma) படிப்பு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer -Civil / Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் லெவல் -6 (Level -6) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த இபிஎஃப்ஓ(EPFO) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் அவசியமாகும்.

சம்பள விவரம்:

இந்தப் பணியிடத்துக்கு (Junior Engineer -Civil / Electrical) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் லெவல் -6-ன்படி (Level - 6) ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இந்த இபிஎஃப்ஓ(EPFO) நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் டெபுடேஷன் (Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer-Civil / Electrical) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.01.2024) தபாலில் அனுப்பித் தரவேண்டும்.

கூடுதல் விவரங்களைப் பெற https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/JE_Advertisement_14122023.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Employees Provident Fund Organization has released an EPFO 2023 recruitment notification for the post of Junior Engineer -Civil / Electrical. The EPFO login link expired on Jan 27, 2024. The exam date shall be out soon.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+