ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்!

மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (நிதி) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

ரூ.3 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்!

இப்பணியிடங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 20ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ்:

எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ்:

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி தற்போது Director (Finance) பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

மேற்பண்ட இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Cost Accountant, Chartered Accountant, Full time MBA (Finance), Full time PGDM (Finance) அல்லது அதற்கு இணைய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Finance Management, Accounting, Budgetary Control, International Finance, Working Capital Managements, Resource Mobilization பணிகளுக்கு 24 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு:
 

வயது வரம்பு:

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் (EESL) இப்பணியிடத்திற்கு விண்ணப்பதாரர் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம்

ஊதியம்

EESL-யின் இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.1,50,000 முதல் அதிகபட்சம் ரூ.3,00,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://eeslindia.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 20.05.2021ம் தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பதிவிறக்கம் செய்து AGM (HR), Energy Efficiency Services Limited (EESL), 5th & 6th Floor, Core-3, SCOPE Complex, Lodhi Road, New Delhi-110003 எனும் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

தேர்வு முறை:

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் (EESL) Director (Finance) பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

மேலும் விபரங்களுக்கு:

மேலும் விபரங்களுக்கு:

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://eeslindia.org/wp-content/uploads/2021/04/Advertisement-for-the-position-of-Director-Finance.pdf அல்லது https://eeslindia.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
EESL Recruitment 2021: Application invited for Director (Finance) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X