மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ECIL எனும் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அணு சக்தித் துறையின் ஒரு அங்கமான ECIL (Electronics Corporation of India Ltd) என்னும் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையில், மொத்தம் இரண்டு பிரிவுகளில் 2 காலியிடங்கள் உள்ளது.
மேலே குறிப்பிட்டவாறு தொழில்நுட்ப அதிகாரி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ECE துறையில் முதல் வகுப்பில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
அதோடு, சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். தொழில்நுட்ப அதிகாரி பிரிவு 2 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கணினி அறிவியல் துறையில், ECE ஏதேனும் ஒன்றில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.ecil.co.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்ற, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவரி 30, 2020
நேர்காணல் நடைபெறும் இடம் : ECIL Office, Guwahati
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் ECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும். நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












