இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.ஐ.எல்) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளோர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு ecil.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்று அழைக்கப்படும் இசிஐஎல் (ECIL) நிறுவனமானது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1967-ல் நிறுவப்பட்டது. , எலக்ட்ரானிக்ஸ் துறையில் வலுவான உள்நாட்டு அடிப்படையை உருவாக்குவதற்காக இது அமைக்கப்பட்டது. இசிஐஎல் என்பது உள்நாட்டு அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கவனம் செலுத்தும் பல தயாரிப்பு, பல ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது. மேலும் இந்த நிறுவனம் உள்நாட்டு மின்னணு பாதுகாப்பு, தகவல் தொடர்பு, நெட்வொர்க்கிங் மற்றும் மின்-ஆளுமை களங்களில் வலுவான தனது இருப்பைக் கொண்டுள்ளது. இசிஐஎல் (ECIL) இந்தியாவின் அணுசக்தி நிறுவனங்களுடன

இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!

குறிப்பாக பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் லிமிடெட் (NPCIL) மற்றும் அணு ஆராய்ச்சிக்கான இந்திரா காந்தி மையம் (IGCAR) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து செயல்பட்டு வருகிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு (இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்; DRDO), விண்வெளி (விண்வெளித் துறை), சிவில் விமானப் போக்குவரத்து, தகவல் மற்றும் ஒலிபரப்பு, தொலைத்தொடர்பு, காப்பீடு, வங்கி, காவல் மற்றும் துணை ராணுவம் போன்ற பிற துறைகளையும் இசிஐஎல் தீவிரமாக ஆதரித்து அந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிறுவனம் நாட்டின் முதல் உள்நாட்டு டிஜிட்டல் கணினிகளான TDC 312 மற்றும் TDC 316, நாட்டின் முதல் பூமி நிலைய ஆண்டெனாவை தயாரித்த பெருமைக்குரியது.

இந்த இசிஐஎல் நிறுவனத்தில்தான் தற்போது மெக்கானிக் 5, எலக்ட்ரீசியன் 7, மெஷினிஸ்ட் 13, பிட்டர் 5 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

இசிஐஎல் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

இசிஐஎல் பணியிடங்களுக்கான வயது விவரம்: 13.4.2024 அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோரின் வயது 27-க்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இசிஐஎல் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, நொய்டா, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்தப் பணிக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கவேண்டும்

கடைசிநாள்: இசிஐஎல் பணியிடங்களுக்கு வரும் 13.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு ecil.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Electronics Corporation of India Limited (ECIL) is accepting applications from skilled and qualified candidates for the post of Technician(GR-II). There are a total of 30 Vacancies available for the aforementioned position. Candidates applying for ECIL Recruitment 2024, the upper age limit is 27 years. The mode of selection will be based on the Written test and trade test.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+