இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 40 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆராய்ச்சியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 40
ஊதியம் : மாதம் ரூ.67,700 முதல் ரூ.1,31,100 வரையில்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் மற்றும் புரொடக்ஷன் இன்ஜினியரிங், இசிஇ, ஈஇஇ, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிமாடிக்ஸ் இன்ஜினியரிங், சிஎஸ்இ, ஐடி போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rac.gov.in என்னும் இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.07.2019


Click it and Unblock the Notifications












