நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில், காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிர்வாகம்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(Defense Research & Development organization)

மேலாண்மை: மத்திய அரசு
காலியிடங்கள்: 36
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 16
பணி விவரம்: அப்ரண்டிஸ்ஷிப்(Apprenticeship)
பணியிடங்கள் விவரம்:
· எலெக்ட்ரீசியன்
· கார்ப்பெண்டர்
· வெல்டர்
· டர்னர்
· மெக்கானிஸ்ட்
· பிட்டர்
· எலெக்ட்ரானிக்ஸ்
· கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவி
· ஸ்டேனோகிராபர் அண்ட் செகரெட்ரியேட் உதவி (ஆங்கிலம் மற்றும் ஹிந்தி)
· கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க் பராமரிப்பு
பணியிடம்: ஜோத்பூர்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
பெருந்தொற்று காலம் என்பதால், நேர்காணல் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தின் இயக்குநரால் அமைக்கப்பட்ட குழு, 'அப்ரண்டிஸ்ஷிப்' பணியிடத்துக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, நபர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஊதியம்:
செயல்திறன் மதிப்பூதியமாக மாதம் ரூ.7,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்
விண்ணப்பிக்கும் நடைமுறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பாணையில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பபங்கள் 16.08.2022க்குள் வந்து சேர வேண்டும்.
வயது வரம்பு, பணி சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், டி.ஆர்.டி.ஓ., வெளியிட்ட அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை ஒரு முறை மறக்காமல் படித்து பாருங்களேன்...!


Click it and Unblock the Notifications












