பட்டதாரி இளைஞர்களே..! கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா?

தருமபுரி மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட

By Saba

தருமபுரி மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட உள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களே..! கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா?

நிர்வாகம் : நகர கூட்டுறவு வங்கி

பணி : உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 07

ஊதியம் : மாதம் ரூ.11,900 முதல் ரூ.32,450 வரையில்

வயது வரம்பு : 01.01.2001 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

ஏதேனும் ஓரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகளில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் உள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டு கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டி.ல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான அட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட்டு பணியிடத்திற்குத் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.drbdharmapuri.net என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://drbdharmapuri.net/recruitment/admin/images/Dharmapuri%20UB%20Advertisement166266_1565268354.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.09.2019

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dharmapuri District Cooperative Bank Recruitment 2019 for Assistant | Last Date: 5 September 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X