டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Dedicated Freight Corridor Corporation of India Limited) நிறுவனத்தில் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பித்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு https://dfccil.com/upload/FVN-99_2023_D0ON.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (DFCCIL) அல்லது டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (டிஎஃப்சிசிஐஎல்) என்ற நிறுவனம் மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது நிதி ஆதாரங்களின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் திரட்டுதல் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்கிறது.

இண்டஸ்ட்ரியல் காரிடார், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா, சாகர்மாலா, பாரத்மாலா, உடான்-ஆர்சிஎஸ், டிஜிட்டல் இந்தியா, பாரத்நெட், பர்வத்மாலா போன்ற இந்திய அரசின் முக்கிய திட்டங்களில் டிஎஃப்சிசிஐஎல்(DFCCIL) செயல்படுத்தி பயனடைகிறது.
டிஎஃப்சிசிஐஎல் நிறுவனம் (DFCCIL) இந்திய அரசாங்கத்தால் ஒரு அரசாங்க நிறுவனமாக நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் (ரயில்வே அமைச்சகம்) நிறுவனம், திட்டமிடல் மற்றும் மேம்பாடு, நிதி ஆதாரங்களை திரட்டுதல் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. டிஎஃப்சிசிஐஎல் நிறுவனம் (DFCCIL) 30 அக்டோபர் 2006 அன்று நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பெருமை மிகு டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில்தான் தற்போது துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த துணைப் பொது மேலாளர் பணிக்குத் தகுதியாக, Sr. Scale (Level-11) அளவிலான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது..
டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Parent pay உடன் deputation allowance ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் டெபுட்டேஷன் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://dfccil.com/upload/FVN-99_2023_D0ON.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












