உள்ளூரிலேயே அரசு வேலை! நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

உள்ளூரிலேயே அரசு வேலை! நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

 

நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நாமக்கல்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 1
  • சமூகப்பணியாளர் - 1
  • உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் - 3

கல்வித் தகுதி:

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளங்கலை, முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : சமூகப்பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.14,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://namakkal.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில்,

மோகனூர் ரோடு, நாமக்கல் - 637 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DCPS Recruitment 2020: Namakkal District Jobs Apply for Assistant & Other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X