திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்
பணி : சிறப்பு ஆசிரியர்
மொத்த காலிப் பணியிடம் : 06
வயது வரம்பு : 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :-
- பணிகளுக்குத் தொடர்புடையத் துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
(புகைப்படத்தை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சுயவிவரக் குறிப்பையும் நேர்முகத் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். )
தேர்வு நடைபெறும் தேதி : ஜூலை 16ஆம் தேதி காலை 10 மணி
ஊதியம் : ரூ.50,000 வரையில்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cutn.ac.in/wp-content/uploads/2019/07/Advertisement_for_Guest_Faculty05072019.pdf அல்லது https://cutn.ac.in என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












