சியுஇடி எனப்படும் (CUET) பல்கலைக்கழக படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://pgcuet.samarth.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு ( CUET) என்பது நாடு முழுவதும் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு(CUET) என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான 45 மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு இளநிலை, ஒருங்கிணைந்த, முதுகலை, பட்டயம் (டிப்ளமோ), சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வாக இது கருதப்படுகிறது.
இந்த சிறப்புவாய்ந்த நுழைவுத் தேர்வை இந்தியாவில் உள்ள பிற மாநிலப் பல்கலைக்கழகங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான இந்த சிறப்புக்குரிய நுழைவுத் தேர்வு, வரும் 2024-ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வில் பிளஸ்-2 வகுப்பில் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இத்தேர்வுகளை தேசியத் தேர்வு முகமை நாடு முழுவதும் நடத்தவுள்ளது.

இதனை தொடர்ந்து 36 மத்திய பல்கலைக்கழங்கள், 8 மாநில பல்கலைக் கழகங்கள், 5 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 2 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மொத்தம் 51 பல்கலைக்கழகங்களுக்கான முதுநிலை பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சியுஇடி நுழைவுத் தேர்வுக்காக https://pgcuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை வரும் ஜனவரி 24ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
பணம் செலுத்துவதற்கு ஜனவரி 25-ம் தேதி கடைசி நாளாகும்.
பணத்தை டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகளை சரி செய்வதற்காக ஜனவரி 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நகரங்கள் மார்ச் 4ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கான நுழைவுசீட்டை மார்ச் 7-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத் தேர்வு மார்ச் 11ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். தேர்வு நேரம் 1.45 மணி நேரமாகு.
இதில் 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
திருத்தம் செய்வதில் கவனம்:
விண்ணப்பதாரர்கள் திருத்தம் செய்யும்கவும் கவனமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் திருத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாது. தகுதி, தேர்வுத் திட்டம், தேர்வு மையங்கள், தேர்வு நேரங்கள், தேர்வுக் கட்டணம், விண்ணப்பிப்பதற்கான நடைமுறை போன்றவை பற்றிய தகவல்கள் NTA https://pgcuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ஏதேனும் கேள்விகள் அல்லது / தெளிவுபடுத்தல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் NTA உதவி மையத்தை 011 4075 9000 என்ற எண்ணில் அழைக்கலாம். மேலும் [email protected] என்ற இணையதளத்தில் சந்தேகங்களை தெரிவிக்கலாம்.
தேர்வு எழுதும் மாணவர்கள் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் மாறும், பங்கேற்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் மாறும் பதிவு செயல்முறை முடியும் வரை. விண்ணப்பதாரர்கள் NΤΑ இணையதளத்தை தவறாமல் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications












