சிஎஸ்ஐஆர்யில் டெக்னீசியன் பணி!

Posted By: Kani

(சி.எஸ்.ஐ.ஆர்)யின் ஒரு அங்கமான சென்ட்ரல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் கொல்கட்டா, லுாதியானா பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடம்:

பணி: டெக்னீசியன் (கொல்கட்டா மையம்)- 25

பணி: டெக்னீசியன் (லுாதியானா மையம்)- 14

வயது வரம்பு: 21-05-2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பிற்கு பின், என்.ஏ.சி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெஷினிஸ்ட், வெல்டர், பிட்டர், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், எலக்ட்ரிகல், மெஷினிஸ்ட், பிளம்பர், ஹாஸ்பிடல் ஹவுஸ்கீப்பிங் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-05-2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து, குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Administrative Officer,

CSIR-Central Mechanical Engineering Research Institute
Mahatma Gandhi Avenue,
Durgapur - 713 209 (West Bengal)

விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்ப கடைசி தேதி: 05-06-2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

English summary
Csir - central mechanical engineering research institute invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia