12-வது தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் 1400 பணியிடங்கள்! அழைக்கும் மத்திய பாதுகாப்புப் படை!!

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.80 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் 1400 பணியிடங்கள்! அழைக்கும் மத்திய பாதுகாப்புப் படை!!

 

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : இந்தியா முழுவதும்

மொத்த காலிப் பணியிடங்கள் : 1412 (ஆண்-1331, பெண்-81)

பணி : தலைமைக் காவலர் (General Duty)

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்புப் படையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.crpf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.03.2020

தேர்வு நடைபெறும் தேதி : 19.04.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRPF Recruitment 2020: Apply Online For 1412 Head Constable posts crpf.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X