மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுத காவல் படையில் (சிஆர்பிஎஃப்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்கள் சிறப்பு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

நிர்வாகம் : மத்திய ஆயுத காவர் படை (சிஆர்பிஎஃப்)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 359
பணி மற்றும் பணியிட விபரம் :-
தலைமைக் காவலர் : 20
காவலர் : 339
கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதிகள் : ஆக்கி, கபடி, வில்வித்தை, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், மல்யுத்தம், பளுதூக்குதல், ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல், கைப்பந்து, துப்பாக்கி சுடுதல், டேக்வாண்டோ, ஹேண்ட்பால், கராத்தே, பாடி பில்டிங் போன்ற விளையாட்டு பிரிவில் சாதனை படைத்தவராக இருத்தல் அவசியம்.
வயதுவரம்பு :
- 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதியம் :
- தலைமை காவலர் : ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரையில்
- காவலர் : ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரையில்
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100
- எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் இலவசம்
விண்ணப்பிக்கும் முறை : www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The DIG, Group Centre, CRPF, Jharoda Kalan, New Delhi110072
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 13
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_162_1_1423122018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












