மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுத காவல் படையில் (சிஆர்பிஎஃப்) காலியாக உள்ள மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 496 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய ஆயுத காவல் படையில் (சிஆர்பிஎஃப்)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : டெல்லி
காலிப் பணியிடம் மற்றும் பணியிட விபரங்கள்:-
- மருத்துவ அலுவலர் - 317
- ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் - 175
- சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் - 4
- மொத்தம் : 496 காலியிடங்கள்
கல்வி தகுதி : எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி
ஊதியம் :
மெடிக்கல் ஆபீசர் : மாதம் ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் : மாதம் ரூ. 67,700 முதல் ரூ.2,08,700 வரையில்
சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் : மாதம் ரூ. 78,800 முதல் ரூ.2,09,200 வரையில்
முன் அனுபவம் : 2 முதல் 5 ஆண்டுகள்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக மட்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.recrultment.ltbpolice.nic.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 01.05.2019
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400
- மற்ற பிரிவினர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ குடும்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.crpf.gov.in/
முகவரி : Central Reserve Police Force, Block No.-1, C.G.O. Complex, Lodhi Road, New Delhi-110 003, INDIA.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.crpf.gov.in/ அல்லது www.recrultment.ltbpolice.nic.in என்னும் லிங்க்கிளைக் கிளிக் செய்யவும்.