மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Central Power Research Institute நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.77 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : Central Power Research Institute
மேலாண்மை : மத்திய அரசு
பணி : நிர்வாக அதிகாரி
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cpri.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 06.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Administrative Officer, Central Power Research Institute, Prof.Sir C.V.Raman Road, Post Box No: 8066, Sadasivanagar (P.O), Bangalore- 560080.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cpri.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.