எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு துறையில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.12 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு M.S.Office பயன்படுத்தத் தெரிந்தவர்கள், தட்டச்சு பயிற்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விரப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழக சத்துணவு துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கணினி உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று, கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
மேலும், இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.12,000 மாதம்
பணி விபரம்:
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு வார கால இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர்/ தாய், தந்தை பெயர்/ தேசியம், இனம், வகுப்பு/ பிறந்த தேதி இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எண்/ கைபேசி எண், கல்வித் தகுதி, தொழில்நுட்ப / கணினி தகுதி/ முன் அனுபவம் ஆகியவற்றினை முழு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் கல்லூரி மாற்று சான்று, பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்று, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன் அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் Gazetted Officer-ன் மேலொப்பம் பெற்று மாவட்ட ஆட்சியர், சத்துணவுத் திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.11.2021 தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












