Coimbatore probation officer Recruitment 2023
கோயம்புத்துார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், உதவியாளருடன் இணைந்த டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் காலிப் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : கோயம்புத்தூர் சமூக பாதுகாப்பு அலகு
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
v நன்னடத்தை அலுவலர்
v டேட்டா ஆப்ரேட்டர்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.03.2023
கல்வி தகுதி/வயது வரம்பு
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், LLB முடித்தவராக இருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் கூடுதல் தகுதியாகும்.
விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று, 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணிக்கு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior level) பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
ஊதியம்
தெரிவு செய்யப்படும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலருக்கு, Rs.27,804/-ம், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் Rs.13,240/-ம் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூடுதல் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/ என்ற மாவட்ட இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலுடன் பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை 15.03.2023 அன்று 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன் சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மறக்காதீங்க...!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் - 641 018.
கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
Want to know about District social defence?
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு/சங்கம் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களோடு இணைந்து, சிறந்த முறையில் செயல்படுத்துதல் என்பதே அலகின் முக்கிய நோக்கமாகும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் தலைமையில், 11 பணியாளர்களுடன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications












