Coimbatore Mega Private Job Fair 2022
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (கோயம்புத்தூர்) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 250க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

15 ஆயிரம்?
முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை பூர்த்தி செய்யும் முனைப்பில் உள்ளன.
8 முதல் பி.இ., வரை
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
ஓய்வு பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், பல தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு, பல்வேறு கல்வி தகுதிகளை உடைய காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
மகளிருக்கென வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
ப்ளீஸ் மறக்காதீங்க...!
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கயவிவரக் குறிப்புடன் (Bio-Data) ஆகியவற்றை நேர்காணலின்போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/102211160006
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/102211160006